பஹ்ரைனில் போராட்டம் வலுக்கிறது: பொலிஸ் தாக்குதலில் இருவர் பலி

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் போது ரப்பர் புல்லட்கள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பிரயோகிக்கப்பட்டன. இதில் இரண்டு போராட்டக்காரர்கள் மரணம் அடைந்தனர். பொலிசார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து சூழ்ந்து கொண்டனர்.
வெள்ளை நிற ஹெல்மேட் அணிந்த பொலிசார் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் பலர் சலாமனியா மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். பொலிசார் தாக்குதலில் இருவர் இறந்ததை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த மக்கள் கூடினர்.
காயம் அடைந்தவர்களை காண உறவினர்கள் கலக்கத்துடன் குவிந்தனர். போராட்டக்காரர்கள் நிகழ்விடத்தில் தூங்கி கொண்டிருந்த போது, பொலிசார் தாக்குதலை நடத்தினார்கள். தேசிய ஜனநாயக செயல் அமைப்பின் பொதுச்செயலாளர் இப்ராகிம் ஷெரிப் கூறுகையில்,"500 முதல் 1000 பொலிசார் தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த மக்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்த வழியே மக்கள் செல்ல பொலிசார் தடைவிதித்தனர்" என்றார்.
பொலிசாரின் ஒரு மணி நேர தாக்குதலுக்கு பின்னர் மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பினர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டறிய முடியவில்லை.

worldnews

No comments:

Post a Comment