

செங்கடல் அருகே உள்ள ஷரம் அல் ஷேக்கில் என்ற ரிசார்ட்டில் அவர் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டு காலமாக எகிப்தின் அதிபர் பதவியில் இருந்துவரும் 82 வயதாகும் ஹோஸ்னி முபாரக் பதவி விலகிய உடனே இந்த ரிசார்ட்டுக்கு வந்து விட்டார். இந்த ரிசார்ட் அவரது நெருங்கிய நண்பரான ஹூசைன் சேலுக்குச் சொந்தமானது என்றும் அல்-மஸ்ரி அல்யவ்ம் என்ற எகிப்திய நாட்டு பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அவரது உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என்றும் அப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அரசு ஆதரவு பத்திரிகை இந்தச் செய்தியை மறுத்துள்ள அதேவேளையில், முபாரக் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை எடுக்க அவர் மறுத்து வருகிறது என்று கூறியுள்ளது.
முபாரக்கின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என தமக்கு செய்தி தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்காவுக்கான எகிப்து தூதர் சமேக் கூறினார்
No comments:
Post a Comment