
இருதயத் தசைகளில் ஏற்படும் பிரச்சினையே இருதயக் கோளாருக்கும், மாரடைப்புக்கும் பெரும்பாலும் காரணமாக அமைகின்றது. பிரிட்டனிலும் இதே நிலை தான்.
செப்ராபிஷ் எனப்படும் ஒரு வகை நன்னீர் மீன் இனத்தைப் பயன்படுத்தி இருதய நோயைக் குணப்படுத்துவது பற்றியே தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. தனது இருதய தசைகளை தானாகவே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் இந்த மீன் இனத்துக்கு உண்டு.மனிதர்களையும் இதே நிலைக்குக் கொண்டு வருவது தான் இந்த ஆராய்ச்சியின் இறுதி நோக்கம். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கடந்த 50 வருடங்களாக இருதய நோய்களை கண்டுபிடிப்பதிலும், குணப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் பழுதடைந்தால் அதை எப்படி குணப்படுத்துவது என்பது தான் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது, என்று இந்த நிறுவனத்தின் மருத்துவப் பணிப்பாளர் பேராசிரியர் பீட்டர் வெஸ்பேர்க் கூறினார்.
விஞ்ஞான ரீதியாக பழுதடைந்த இருதயத்தைத் திருத்துவதென்பது முடியாத ஒரு காரியமல்ல. கை, கால்கள் உடைந்தால் திருத்துவது போல் தான் இதுவும். ஆனால் அடுத்த 10 வருடத்துக்குள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள 50 மில்லியன் பவுண் தேவைப்படும் இதுதான் பிரச்சினை என்று விளக்கமளிக்கின்றார் பேராசிரியர் பீட்டர் வெஸ்பேர்க்.
செப்ராபிஷ் மீன் இனம் முழு அளவில் செயற்படும் சிறிய இதயத்தைக் கொண்டது. எனவே பழுதடைந்த இதயங்களைச் சீர் செய்யும் ஆய்வுகளுக்கு இவை பெரும் துணையாக இருக்கும் என்று இவர் மேலும் கூறினார்.
நன்றி:நியூஸ் ஒன்
No comments:
Post a Comment