இன்று இரவு பதவி விலகுகிறார் ஹோஸ்னி முபாரக்

இன்னும் சில மணி நேரங்களில் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக உள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஜனவரி 25 முதல் நடந்த மக்கள் போராட்டம் முதற் கட்ட வெற்றியை அடைந்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் புதிய போது செயலாளராகப் பொறுப்பு ஏற்றுள்ள ஹோசைன் பத்ராவி இத்தகவலை வெளியிட்டுள்ளார். எனினும் அவர் பூடகமாகவே இதனைத் தெரிவித்துள்ளார். "இன்று இரவு ஒரு முடிவு எட்டப்படும். அனேகமாக பொறுப்பு கை மாற்றப்படும்" என்றார் அவர்.

பிபிசி அரபியாவுக்குப் பேட்டி அளித்த எகிப்திய பிரதமரும் இத்தகவலை உறுதி செய்துள்ளார். "அதுபற்றி பேசினோம் தாம், விரைவில் முடிவு தெரிவிக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

82 வயதாகும் ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு ஆட்சி இவ்வாறாக முடிவுக்கு வருகிறது.inneram

No comments:

Post a Comment