நாற்பது வருடங்களுக்கு முன்பு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வீட்டுப் பணியாளாக, பாத்திரங்கள் கழுவி சமையல் செய்தவர் தான் இன்றைய ஜனாதிபதி என்று இராஜஸ்தான் பஞ்சாயத் ராஜ் மற்றும் வக்ப் அமைச்சர் அமீன் கான் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். அவரது பேச்சு தொலைக்காட்சியிலும்
ஒளிபரப்பானது.இந்தப் பேச்சு இராஜஸ்தான் மாநிலத்திலும், டெல்லி காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர் அமீன் கானைக் கண்டித்து இராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன
இதையடுத்து முதலவர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் மேலிடம் அவசரமாக டெல்லிக்கு வர வழைத்தது. அவர் உடனே டெல்லி புறப்பட்டுச் சென்றார். .காங்கிரசார் மட்டும் அல்லாது ராஜ்புத்கார்னி சேனா என்ற அமைப்பும் போராட்டத்தில் ஈடுபட்டது.
குடியரசுத் தலைவரின் சொந்த ஊரான சிகார், சுற்றுப்புறங்கள் ஜோத்பூர், சுரு, தவுசா, சவாய் மதோபூர் ஆகிய இடங்களில் அமைச்சர் அமின்கானின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மந்திரி அமின்கான் தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார். என்றாலும் மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
குடியரசுத் தலைமை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும் போது, மந்திரியின் பேச்சு உண்மையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். இராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் பாரதீய ஜனதா மாநிலத் தலைவருமான வசுந்தரா ராஜே " மந்திரியின் பேச்சு பெண்கள் வெட்கப்படக் கூடியது" என்று கூறினார்.
குடியரசுத் தலைவரின் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண் டஸ் இது தொடர்பாக இராஜஸ்தான் கவர்னர், முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசினார். மந்திரி சொன்னது உண்மையானால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். குடியரசுத் தலைவர பிரதீபா பட்டீலின் கணவர் தேவி சிங் கூறுகையில் மந்திரியின் பேச்சால் நாங்கள் புண்பட்டுள்ளோம்.காங்கிரஸ் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பதவியில் இருந்து நீக்கினால் போதாது.அமீன் கானை கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று இராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் லோகேந்திர சிங் கால்வி கூறினார்.
இந்த நிலையில் அமின் கான் மந்திரி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவரை உடனே பதவி விலகுமாறு முதலவர் அசோக்கெலாட் உத்தரவிட்டு உள்ளார்.
Inneram.com
No comments:
Post a Comment