அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அதிபர் முபாரக்


கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி செய்து வரும் ஹோஸ்னி முபாரக்கின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தலைநகர் கொய்ரோவில் உள்ள சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டதை தொடர்ந்து, அதிபர் முபாரக் மக்களின் போராட்டத்திற்கு பணிந்தார். தற்போதைய ஆட்சி காலம் வரை இருப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் நாடு வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் கொந்தளிப்பு தீவிரமடைந்தது.
சர்வதேச அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரான முகமது எல்பராடே மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். அல் அரேபியா டெலிவிஷனுக்கு அவர் அளித்த பேட்டியில், முபாரக் பதவி விலகாமல் நீடிப்பது நாட்டின் நிலைமையை குலைக்கும் என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், முபாரக்கிற்கு தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், எகிப்தில் உரிய மாற்றம் மேற்கொள்வதே அர்த்தம் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தேன் என்றார்.
நன்றி:நியூஸ் ஒன்

No comments:

Post a Comment