கேரளாவில் நடுரோட்டில் கிடந்த 80 பாஸ்போர்ட்டுகள்: போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில், தமிழ்நாடு மற்றும் கேரள முகவரியுடன் கூடிய 80 பாஸ்போர்ட்டுகள் தெருவில் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் மாலை தெருவில் ஒரு பார்சல் அனாதையாகக் கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்று கொண்டிருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கரன்சிங் தாகூர் என்பவர் எடுத்துப் பார்த்தார். அப்போது அதில் ஏராளமான பாஸ்போர்ட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

தகவல் அறிந்த தம்பனூர் போலீசார் பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் தமிழ்நாடு மற்றும் கேரள முகவரியுடன் கூடிய 80 பாஸ்போர்ட்டுகள் இருந்ததும், அவை கொச்சியில் உள்ள ஒரு டிராவல்ஸ் எஜென்சியில் திருட்டு போனவை எனவும் தெரிய வந்தது.

அவை உண்மையான பாஸ்போர்ட்டுகள் தானா என ஆய்வு செய்ய திருவனந்தபுரம் விமான நிலைய குடியுரிமைத்துறை அதிகாரிகளை தம்பானூர் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்,.

நன்றி: தேட்ஸ் தமிழ்

No comments:

Post a Comment