5-ம் வகுப்பில் 27 பேரை பெயில் ஆக்கிய பள்ளி தலைமை ஆசிரியை “சஸ்பெண்டு” கல்வி அதிகாரி உத்தரவு

5-ம் வகுப்பில் 27 பேரை பெயில் ஆக்கிய
 
 பள்ளி தலைமை 
 
 ஆசிரியை “சஸ்பெண்டு”
 
 கல்வி அதிகாரி உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு கடந்த 2009-2010 கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு படித்த 48 மாணவ-மாணவிகளில் 10 மாணவர், 17 மாணவிகள் ஆகிய 27 பேரை 5-ம் வகுப்பில் பெயில் ஆக்கினர்.
 
இதற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா தேவி தான் காரணம் என்று புகார் எழுந்தது. 8-ம் வகுப்பு வரை யாரையும் பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில் மாணவ-மாணவிகளை எப்படி பெயில் ஆக்கலாம் என்று பெற்றோர் தரப்பில் உதவி கல்வி ஆதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இது குறித்து உதவி தொடக்க கல்வி அதிகாரி ஷாஜகான் அப்பள்ளியில் விசாரணை நடத்தினார். விசாரணையில் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 27 பேரை பெயில் ஆக்கியது ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
 
இது குறித்து உதவி தொடக்க கல்வி அதிகாரி ஷாஜகான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி தமிழரசிடம் அறிக்கை அளித்தார்.
 
இதையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியும் பள்ளி தலைமை ஆசிரியை அமுதாதேவியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அமுதாதேவியை சஸ்பெண்டு செய்து உத்தர விட்டார்.

மேலும் பெயில் ஆக்கப் பட்ட 27 மாணவ-மாணவி களையும் பட்டணம்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் 6-ம் வகுப்பு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்

No comments:

Post a Comment