இந்திய ராணுவ கேப்டன் உட்பட 3 பேர் கைது

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ராணுவம் ரகசியங்களை விற்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விவகரத்தில் இந்திய ராணுவம் மேற்பிரிவு படை கேப்டன் ஒருவரும் கைதாகியுள்ளார். 

இமாச்சல பிரதேசம் மான்டி நகரை சேர்ந்தவர் அம்ரிக்சிங்.  இவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்து வந்தார். அவர் நடவடிக்கைகளை இமாச்சல பிரதேச போலீசார் கண்காணித்து வந்தனர்.
 
அவர் சன்கரா நகரை சேர்ந்த மும்பை ராணுவ வீரர் பகவான்தாஸ் என்பவருக்கு அடிக்கடி பணம் அனுப்பி வருவதை கண்டுபிடித்தனர்.
 
எனவே அம்ரிக் சிங்கை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
 
முன்னாள் ராணுவ வீரரான பகவான் தாஸ் இந்திய ராணுவம் பற்றிய பல்வேறு ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கி இருக்கிறார். இதற்காக ஐ.எஸ்.ஐ. அமர்சிங் வழியாக பணத்தை பகவான்தாசுக்கு ஹவாலா மூலம் கொடுத்துள்ளது.
 
இதையடுத்து போலீசார் பகவான் தாசை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது மேலும் தகவல்கள் கிடைத்தன. பகவான்தாசை முன் னாள் ராணுவ கேப்டன் ஞான ஷியாம் சிங் என்பவர்தான் உளவு பார்க்கும் பணிக்கு அமர்த்தி இருப்பது தெரிகிறது. உடனே அவரையும் கைது செய்தனர். ஞானஷியாம் சிங் ராணுவம் மேற்பிரிவு படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்.
 
இவர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதுடன் உளவு சொல்வதற்கு பல்வேறு ராணுவ வீரர்களையும் நியமித்து உள்ளார். அவர்கள் யார்-யார்? என்று கண்டு பிடிப்பதற்காக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஹாப்காய், மற்றும் தாய்லாந்து வழியாக ஹவாலா பணத்தை உளவு பார்க்கும் ஏஜெண்டுளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
 
மான்டி நகரை சேர்ந்த புனியாதேவி என்பவரின் கணவர் ஹாங்காங்கில் வேலை பார்த்து வருகிறார். அவர் அந்த பணத்தை மனைவி புனியா தேவிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த பணத்தை அம்ரிக்சிங் பெற்று ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
 
புனியாதேவி மூலம் 7 பேருக்கு பணம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. எனவே புனியாதேவி மற்றும் 7 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment