பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 ராணுவ வீரர்கள் பலி

பெஷாவர், பிப்.10: பாகிஸ்தானின் ராணுவ முகாம் ஒன்றில் பயிற்சி மேற்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பள்ளி சீருடை அணிந்த மனித வெடிகுண்டு சிறுவன் நடத்திய தாக்குதலில் 27 வீரர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர் என போலீஸ் மற்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

வடமேற்கு நகரான மர்தானில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பாகிஸ்தானின் தலிபான் இயக்கத்தினர் இதுபோன்ற தாக்குதல்களை கடந்த காலங்களில் நடத்தியிருப்பதால் இதையும் அவர்களே செய்திருப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்திருப்பதாகவும் உயர் போலீஸ் அதிகாரி அப்துல்லா கான் தெரிவித்தார்.

ராணுவ முகாமுக்குள்ளேயே தற்கொலைப்படை தாக்குதல் நடந்திருப்பது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006-ம் ஆண்டு இதேபோன்று ராணுவ முகாமுக்குள் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


dinamani

No comments:

Post a Comment