விரைவில் வருகிறது 150 ரூபாய் நாணயம்

இந்தியாவில் வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து 150 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியாகிறது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படும். இது தவிர, சிறப்பு 5 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட உள்ளது. இந்திய அரசு 150 ரூபாய் நாணயம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பான அறிவிக்கையை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை சமீபத்தில் வெளியிட்டது. வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றின் கலவையாக இந்த நாணயம் இருக்கும். இதில் "சத்யமேவ ஜெயதே" என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
சாணக்கியர் மற்றும் தாமரை பூ ஆகியன இதில் இடம்பெற்றிருக்கும். இதே பாணியில் ரூ. 5 நாணயமும் இருக்கும். ரூ. 150 மதிப்பிலான நாணயங்கள் மொத்தம் 200 மட்டும் உருவாக்கப்படும். இதேபோல ரூ. 5 மதிப்பிலான சிறப்பு நாணயங்கள் 100 தயாரிக்கப்படும்.


thanks to:Newsindia

No comments:

Post a Comment