
சிவகிரி:வாசுதேவநல்லூர் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. வாசுதேவநல்லூர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட், ஆஸ்பத்திரி, அரசு சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு கூடங்கள், நடமாடும் மருத்துவக்குழு உட்பட 57 மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட 6,349 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சிவகிரி காசிங்கபேரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு சாந்தி சரவணாபாய் தலைமையிலான மருத்துவ குழுவினர் சொட்டு மருந்து வழங்கினர்.சிவகிரி சுற்றுப்பகுதியில் உள்ள வயல்வெளிகள், செங்கல்சூளை பகுதிகளையும் ஆராய்ந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழுவினர் சொட்டு மருந்து வழங்கினர்.சிவகிரி டவுன் பஞ்.,பகுதியில் தலைவர் போஸ், வாசுதேவநல்லூர் டவுன் பஞ்.,பகுதியில் தலைவர் தவமணி முகாமை துவக்கி வைத்தனர். வாசுதேவநல்லார் ஆரம்ப சுகாதார பகுதியில் 228 பணியாளர்கள் பணியாற்றினர். முகாம் ஏற்பாடுகளை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் ஆலோசனையின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி சரவணாபாய் செய்திருந்தார்.
thanks to:http://www.dinamalar.com/district_detail.asp?id=175775
No comments:
Post a Comment