தமிழகத்தில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்-தேசியக் கொடியேற்றினார் பர்னாலா


Surjit Singh Barnala
சென்னை: தமிழகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் இன்று 62வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் குடியரசு தின விழா கொண்டாட்டம் களை கட்டியது.

சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், பல்துறைப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவியரின் நடனம், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அவற்றை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியின்போது ஆர். விவேகானந்தன், ஜே.ரவி, எஸ்.ராஜகோபால், ராஜேஷ் குமார் ஆகியோருக்கு அண்ணா வீர விருதினை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

மேலும், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கும் முதல்வர் பரிசுகளை அளித்தார்.

மாவட்டத் தலைநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

thanks to:http://thatstamil.oneindia.in/news/2011/01/26/tn-republic-day-celebration-governor-barnala-aid0091.html

No comments:

Post a Comment