தெலுங்கானாவை எதிர்த்தால் வெட்டிக் கொல்வோம்!-விஜயசாந்தி

ஹைதராபாத்: தெலுங்கானாவை எதிர்ப்போரை வெட்டிக் கொல்வோம் என்று ஆவேசமாகக் கூறினார் நடிகையும் எம்பியுமான விஜயசாந்தி.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கலாமா? என்பது பற்றி ஆராய மத்திய அரசு ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை நியமித்தது. இக்கமிட்டி சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 6 அம்ச பரிந்துரைகள் இருந்தன. ஆனால் தெலுங்கானா அமைக்கலாமா? வேண்டாமா? என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "“தெலுங்கானா மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தனி மாநிலம் அவசியம்.

ஆனால் மத்திய அரசு தனி மாநில விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது தெலுங்கானா பகுதியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக மறுக்கிறார்கள். அவர்களை தெலுங்கானா மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தெலுங்கானா மாநிலத்தை கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியை சேர்ந்தவர் எதிர்க்கிறார்கள்.

தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் வெட்டிக் கொல்வோம். தெலுங்கானா தனி மாநிலம் தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் சந்திரசேகரராவ் பங்கேற்கும் நிகழ்ச்சியைத் தடுப்பேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அவருக்கு நான் பங்கேற்கும் நிகழ்ச்சியை தடுக்க தைரியம் உண்டா? எனது சுயரூபம் என்ன என்பது காங்கிரசாருக்கு தெரியாது. அதை விரைவில் பார்ப்பார்கள்...", என்றார்.thanks to:http://thatstamil.oneindia.in/news/2011/01/25/we-will-destroy-the-anti-telangana-forces-aid0091.html

No comments:

Post a Comment