உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இணையதளம் ஆரம்பம்!


மும்பை: உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இணையதளம் ஒன்று தொடங்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி), யாஹூ இந்தியாவும் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்குகிறது. iccevents.yahoo.com என்ற பெயரில் இயங்கும் இந்த இணையதளம் விரைவில்  தொடங்கப்படும் எனத்தெரிகிறது.
கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள், ஆட்டம் நடைபெறும்போது அது தொடர்பான விவரங்கள் மற்றும்  வீடியோ காட்சிகள் போன்றவைகளை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணையதளம் மூலம் ஆன்லைனில் டி சர்ட் மற்றும் தொப்பி போன்ற பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment