மர்ம வைரஸ் தாக்குதல்! நோயாளி,டாக்டர், நர்ஸ் பரிதாப சாவு

அகமதாபாத்:குஜராத்தில் பரவி வரும் புதிய வகை மர்ம்மக்காய்ச்சலுக்கு  பாதிக்கப்பட்ட நோயாளி, சிகிச்சையளித்த டாக்டர் மற்றும் செவிலியர் என மூவரும் பலியாகியுள்ளது அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் புதிய வகை மர்ம வைரஸ் கிருமி ஒன்று பரவி வருகிறது. இந்த புதிய வகை மர்ம வைரஸ் கிருமி தாக்குதலால் ஏற்பட்ட நோய்க்கு இதுவரை மூன்று  பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார குழு, (CCHF virusஎன்ற மர்ம வைரஸ் கிருமிகள் மூலம் இந்த நோய் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர்.
தலைநகர் அகமதாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில்  இந்த வைரஸ் காய்ச்சலுடன் சமீனா பானு என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சமீனா பானு, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகிய மூவரும் இந்நோய் தொற்றினால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் அகமதாபாத் நகர் முழுவதும் தீவிரப் பரிசோதனைப் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment