வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தால்.....?


தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைத்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேஷி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: தமிழகத்தில் 20 முதல் 25 சதவீதம் வரை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் தொலைந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் அளிக்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டு அட்டைகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் 99.77 சதவீதமும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் 99.68 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும்.
அன்றைய தினத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டைகள் அளிக்கப்படும் என்று குரேஷி தெரிவித்துள்ளார்

thanks to:http://ww.inneram.com

No comments:

Post a Comment