தென் சூடான் தனி நாடாக 99.57% ஆதரவு

ஆப்ரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகமாகவும் தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாகவும் வசித்து வருகின்றனர். தெற்கு சூடானில் ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். தென்பகுதி மக்கள் அரசினால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அந்தப்பகுதி மக்கள் தனி நாடு கேட்டு போராடி வந்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடத்த சூடான் அரசு ஒத்துக் கொண்டது. இந்த நிலைமையில் தெற்கு சூடானுக்குச் சுதந்திரம் வழங்கலாமா என்பதற்கான வாக்கெடுப்பு கடந்த 9.1.2011 முதல் ஒரு வார காலம் நடைபெற்றது.

முதற் கட்ட வாக்குப்பதிவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 99.57 சதவிகித மக்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே தென் சூடான் வரும் ஜூலை 9 ஆம் திகதி முதல் தனி நாடாக அறிவிக்கப்படும். போராட்டத்தை வழிநடத்திய சூடான் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் ஸால்வா கீர் புதிய அதிபராக அன்று பதவியேற்பார் என சூடானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment