ஒலியைவிட 7 மடங்கு அதிவேக ஏவுகணை : சிவதாணு பிள்ளை!

ஒலியைவிட 7 மடங்கு வேகமாகச் செல்லும் திறனுடைய ஏவுகணையைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பிரமோஸ் ஏரோபேஸ் திட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான ஏ. சிவதாணு பிள்ளை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவதாணு பிள்ளை, "இந்திய விமானப் படையில் இணைக்கப்படவுள்ள பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை அடுத்த ஆண்டுக்குள் தயாராகிவிடும்" என்று கூறினார். 

"இந்த ஏவுகணை மற்ற நாடுகளில் உள்ள ஏவுகணைகளைவிட 9 மடங்கு அதிக வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கும் திறன் படைத்தது" என்றும் அவர் கூறினார்.
 

ஒலியைவிட 7 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் திறனுடையதாக பிரமோஸ் ஏவுகணைகளை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
 

"பிரமோஸ் ஏரோபேஸ் நிறுவனம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மூளையில் உதித்த திட்டம்" என்றும் சிவதாணு பிள்ளை கூறினார்.

No comments:

Post a Comment