
1 பைசா, 2 பைசா நாணயங்கள் ஒரு காலத்தில் இருந்தன. பின்னர் குறைந்தபட்ச நாணயமாக 10 பைசா இருந்தது. 10, 20 பைசா நாணயங்கள் வழக்கொழிந்த பின்னர் 25 பைசா நாணயம் குறைந்தபட்ச நாணயமாகப் புழக்கத்தில் இருந்து வந்தது. பொதுமக்களின் உபயோகத்தில் இது இல்லாமல் இருந்தாலும் அரசின் புழக்கத்தில் இருந்து வந்தது.
ஜூன் 30ஆம் தேதிக்குப் பின் குறைந்த பட்ச செல்லத்தக்க நாணயம் 50 காசாக இருக்கும். நடைமுறையில் வரி மற்றும் பணம் செலுத்துதல் போன்றவற்றில் கடைசி செல்லத்தக்க பணம் 50 காசாக கருதப்படும். அல்லது அதை முழுமையாக்கி ஒரு ரூபாயாக கணக்கிடப்படும் என்று வியாழக் கிழமையன்று வெளியான மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய முறையான அறிவிப்பை ரிசர்வ் வங்கியும் வெளியிடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
thanks to:http://www.inneram.com/
No comments:
Post a Comment