11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை : திருவாரூர் மாவட்ட கலெக்டர் உட்பட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 11 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் தங்க கலியபெருமாள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றும் விஸ்வநாத் ஷெகாங்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முதன்மை செயலராக செயல்படுவார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலர் ராமநாதன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனராகவும், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை கமிஷனர் மாலிக் பெரோஸ்கான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தொழிற்சாலை வெடிபொருள் நிறுவன மேலாண் இயக்குனர் மோகன், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை கமிஷனராகவும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி முதன்மை செயலர் ரமேஷ் குமார் கண்ணா, எரிசக்தி துறை முதன்மை செயலராகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனராகவும், தமிழக தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பண்டகசாலை கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் ரவுல்கும்லின் பஹ்ரில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் பொருட்கள் வணிகத்துறை கமிஷனர் அதுல் ஆனந்த், வேளாண்துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். எழுதுபொருள், அச்சகத்துறை இயக்குனர் விவேகானந்தன், வேளாண் பொருட்கள் வணிகத்துறைக்கான இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment