10.7 லட்சம் குழந்தை கள் ஒரு வயதிற்குள் இறப்பு: ஆண்டுக்கு 7 லட்சம் பெண் சிசு கலைப்பு


Baby
கொல்கத்தா: ஆண் என்ன, பெண் என்ன என்று என்னதான் தலைபாடாக அடித்துக் கொண்டாலும், எத்தனைதான் பிரசாரம் செய்தாலும், பெண் சிசுக்களை கருவியே அழிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இந்தியாவி்ல் ஆண்டுக்கு 7 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஒருவர் தெரிவி்த்தார்.

இது குறித்து மனித உரிமை ஆணைய உறுப்பினர் சத்யபிரதா பால் கூறியதாவது,

இந்தியாவில் 25 சதவிகிதக் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றனர். மேலும், 10.7 லட்சம் குழந்தைகள் ஒரு வயதுக்குள்ளேயே இறந்து விடுகின்றனர். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்தின்றி இருக்கின்றனர்.

ஆண் குழந்தை மேல் உள்ள ஆசையால் தினமும் 2 ஆயிரம் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் பெண் குழந்தைகள் தங்கள் பெற்றோராலேயே கருவில் கலைக்கப்படுகின்றனர் என்று ஐ. நா. கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கணிப்புபடி கடந்த 2002ல் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து ஆயிரத்திற்கு 90 ஆக இருந்தது. இதுவே கடந்த 1970ல் ஆயிரத்திற்கு 202 ஆக இருந்தது. குழந்தைகள் இறப்பு விகிதம் 90களில் தான் மந்தமானது. ஆனால் அதே நேரத்தில் தான் பொருளாதாரம் [^] முன்னேறியது.

உலக சுகாதார புள்ளி விபரத்தின்படி சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏராளமானோர் குறைந்த எடையுடன் இருக்கின்றனர்.

நல்ல சுகாதாரமான மக்கள் உள்ள நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் 20 மடங்கு அதிக எடை குறைவான குழந்தைகள் உள்ளனர். இது சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள எடை குறைந்த குழந்தைகளின் சராசரி சதவிகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.

அங்கன்வாடியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுவது மிக அரிதாக உள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்று யாரும் கண்காணிப்பதில்லை. ஆனால் அறிக்கையில் அவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாக பொய்யாக உள்ளது.

பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர் என்ற கணக்கே தவறாக உள்ளது. பல பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஒழுங்காக இல்லை. பெரும்பாலானவர்கள் மதிய உணவுக்காகத் தான் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்புகின்றனர்.

அவ்வவாறு உணவு சாப்பிட மட்டுமே வரும் குழந்தைகள் வகுப்புகளுக்குச் செல்வதில்லை. இதனால் பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என்பது தவறானது.

பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் உள்கட்டமைப்பு என்பது சரியில்லை அல்லது இல்லவே இல்லை. உயர் நிலை பள்ளிகளில் கூட ஒழுங்கான வசதியில்லை.

நான் ஜார்க்கண்டில் உள்ள ஒரு கிராமப்புற உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆனால் அங்குள்ள வகுப்புகளில் 3ல் ஒன்றில் தான் மேசை, நாற்காலி இருந்தன. மின்சாரம் என்பதே அங்கு இல்லை.

அந்த பள்ளியில் முதல்வர் [^] உள்பட 5 ஆசிரியர்கள் இருந்தனர். அதில் ஒருவர் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில் தேர்ச்சி பெற்றவர். ஒருவர் அறிவியல் ஆசிரியராக இருப்பவர். மற்ற இருவர் பியூன்கள் என்றார்.

thanks to:http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/10-7-lakh-kids-die-before-age-one-in-india-aid0091.html

No comments:

Post a Comment