இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஜகார்த்தா : இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 5.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 07.01 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால், மக்கள் சுனாமி பீதி அடையத் ‌தேவையில்லை என்றும் அது தெரிவி்ததுள்ளது. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதியில் நிகழ்ந்த சுனாமி பேரலை நிகழ்வில் சிக்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதை மக்கள் இன்னும் மறக்காத நிலையில், சுனாமி பீதி மக்களை பெரிதும் கலக்கமடையச் செய்து வருகிறது.

thanks to:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151757

No comments:

Post a Comment