லண்டன்- சென்னை விமானம் ரத்து


இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய நாடுகளில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லண்டனில் இருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வழக்கமாக அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வரும். பின்னர் காலை 4 மணிக்கு அந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் செல்லும். பனி மூட்டம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை வராத்தால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள்  அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். விமானம் மீண்டும் லண்டன் செல்லும் போது தகவல் தெரிவிக்கப்படும் என்று பயணிகளிடம் கூறப்பட்டது. பயனணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்
 
thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment