குடும்ப அட்டைகளில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும்

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகளில் 20 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வருடம் 2011 டிசம்பர் வரை பயன்படுத்தும் வகையில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும் என்று உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சுவரண்சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் 2010 டிசம்பர் மாதத்துடன் முடிவடைகின்றன. ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளே 2011 டிசம்பர்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள குடும்ப அட்டைகள் அடுத்தவருடம் டிசம்பர் 31-ந்தேதி வரை செல்லுபடியாகும். அட்டைகளில் உள்ள பக்கங்கள் தீர்ந்து விட்டால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளும்வகையில் புதிய பக்கங்கள் தாள்கள் அச்சிட்டு வழங்க 
உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment