அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்ப எதிர்த்து இந்து மகாசபை அப்பீல்

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி விவகாரத்தில் நிலத்தின் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இந்து மகாசபை முடிவு செய்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று மேல் முறையீடு செய்வோம். மாபெரும் ராமர் கோயில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று இந்து மகாசபை உறுப்பினர் கம்லேஷ் திவாரி சனிக் கிழமையன்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே ஜம்இய்யத் உலமா - இ - இந்த் என்ற அமைப்பும் சுன்னி வக்ஃப் வாரியமும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.


thanks to:http://www.inneram.com

No comments:

Post a Comment