இந்திய டாக்டர் ஹனீஃப்பிடம் மன்னிப்பு கோரியது ஆஸி.அரசு

மெல்போர்ன்:
தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஆஸ்ட்ரேலியாவில் கைது செய்யப்பட்டு, மிகுந்த அலைகழிப்புக்குள்ளான இந்தியரான டாக்டர் ஹனீஃப்பிடம் அந்நாட்டு அரசு தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு, தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஆஸ்ட்ரேலிய காவல்துறையினரால் தவறான குற்றச்சாற்றின் பேரில் கைது செய்யப்பட்டு, பல நாட்கள் விசாரணை, அலைகழிப்பு என மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளானார் ஹனீஃப்.

விசாரணையில் அவர் நிரபராதி என தெரியவந்த பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்த கைது சம்பவம் காரணமாக தனது பெயருக்கு ஏற்பட்ட அவமரியாதை மற்றும் மருத்துவத் தொழில் பாதிப்புக்கு ஆஸ்ட்ரேலிய அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி தமது வழக்கறிஞர்கள் சார்பில் அவர் முறையிட்டார்.

இந்நிலையில் தற்போது ஆஸ்ட்ரேலியா வந்திருக்கும் ஹனீஃபுக்கு, அந்நாட்டு அரசு நஷ்டஈடு வழங்க முன்வந்திருக்கிறது.

அத்துடன் அவர் தொடர்ந்து அங்கு தங்கியிருப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ள ஆஸ்ட்ரேலிய அரசு, 2007 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு ஹனீஃபிடம் மன்னிப்புக் கோருவதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஆஸ்ட்ரேலிய அரசு மீது அவதூறு வழக்குத் தொடரும் முடிவை ஹனீப் கைவிட்டுள்ளார்.

thanks to:http://tamil.webdunia.com/newsworld/news/international/1012/23/1101223022_1.htm

No comments:

Post a Comment