
இதைப் பரிசீலித்த முதலமைச்சர் கருணாநிதி, முஸ்லிம் லீக் மாநாட்டில் வெளியிட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில் தற்போதுள்ள அரபி,உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற சிறுபான்மையினர் மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப் படுமென்று உத்தரவிட்டுள்ளார்.
மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மையினர் மொழிப் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும் என்றும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுமென்றும், மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம் பெறும் என்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
நன்றி: http://www.inneram.com/2010121512518/minority-langugages-will-be-included-tn
No comments:
Post a Comment