பாஜக - சிவசேனா கூட்டணிக்குள் பிளவா?


மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்று மாநில பாஜக தலைவர் சுனில் முன்கண்டிவரை சந்தித்தி பேசினார். தமது கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின் அருகில் இருந்த பாஜக அலுவலகம் சென்ற ராஜ் தாக்கரேவை மாநில பாஜக தலைவரும் மற்ற நிர்வாகிகளும் வரவேற்றனர்.

திடீரென நடைபெற்றுள்ள இரு தலைவர்களிடையேயான சந்திப்பு மும்பை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, ராஜ் தாக்கரே உடனான சந்திப்பு குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் புதன் கிழமையன்று டெல்லியில்  பாஜக தலைமையில் நடைபெற உள்ள பேரணியை புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளது.

20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து தெரிவித்த மாநில பாஜக தலைவர், இந்த சந்திப்பு அரசியல் சந்திப்பு அல்ல என்றும் ராஜ் தாக்கரே விருந்தாளியாகவே பாஜக அலுவலகத்துக்கு வருகை புரிந்ததாக தெரிவித்தார். மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா சென்ற சட்டசபை தேர்தலில் 6 சதவீத வாக்குகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத் தக்கது.
 
thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment