அல்-ஹப்தூர் சேலஞ்ச் - சானியா அபார வெற்றி


துபாயில் நடந்த அல்-ஹப்தூர் சேலஞ்ச் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீராங்கனை ஜோவனோவ்ஸ்கியை வீழ்த்தி சானியா மிர்சா  சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் சானியாவுக்கு ரூ.34 லட்சம் பரிசுத்தொகையும், 110 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

முதல் செட்டை இழந்த சானியா, அடுத்த 2 செட்களிலும் ஜோவனோவ்ஸ்கியை திணறடித்தார். இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

துபாயில் தனது பாகிஸ்தானி கணவர் சோயிப் மாலிக்குடன் வசித்து வரும் சானியாவுக்கு இந்திய பாகிஸ்தானிய ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. வெற்றிக்கு பிறகு அவர் கூறுகையில், `2010 இன் தொடக்கம் எனக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் இறுதி வெற்றிகரமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
 
thanks to:http://www.inneram.com

No comments:

Post a Comment