
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. முதல் இன்னிங்க்சை துவக்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்க்சில் 4 விக்கெட் இழப்புக்கு 620 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இன்னிங்க்ஸ் தோல்வியைத் தவிர்க்கவே 484 ரன்கள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஆடத் தொடங்கிய இந்திய அணி ஓரளவு தாக்குப் பிடித்து ஆடியது . எனினும் இந்திய அணியால் தோல்வியைத் தவிர்க்க முடிய வில்லை. இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தமது 50 வது சதத்தை எட்டினார். கேப்டன் தோனி 90 ரன்களும், காம்பிர் 80 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் சேர்த்தார்.
முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்சில் 459 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்க்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரட்டை சதம் அடித்த கல்லிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
thanks to;http;//www.inneram.com/
No comments:
Post a Comment