தமிழக அரசின் அன்னிய மொழித் திணிப்பு - தமிழர்களம் போராட்டம்

 

தமிழக அரசு சமீபத்தில் சமச்சீர் கல்வி முறையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் அரபி மொழிகளும் பள்ளிகளில் வாரத்திற்கு நான்கு முறை நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு
எதிராக தமிழர்களம் என்ற அமைப்பு நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அன்னிய மொழித்திணிப்பை எதிர்த்து தொடர் முழக்கப் போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழர் களத்தின் தென்மண்டல பொறுப்பாளர் சேசுராசு தலைமை தாங்கினார்.
அன்னிய மொழிகளை பள்ளிப்பாடத்தில் சேர்ப்பதன் மூலம் தமிழ் மொழி அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படும் என்றும் கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் கேரளாவிலும் 2 கோடித் தமிழர்கள் இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகள் ஏதும் தற்போது அங்கு இல்லை என்றும் சேசுராசு போராட்டத்தின் போது தெரிவித்தார். கருணாநிதி தெலுங்கு இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அன்னிய மொழிகளை திணிக்கிறாரோ என பயப்படுவதாக அவர் கூறினார்.

thanks to: http://www.inneram.com/

No comments:

Post a Comment