விமான நிலைய அறிவிப்புத் திரையில் ஆபாச வீடியோ!


வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜாலால் சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் திரையில், ஆபாசப் படம் காட்டப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாக்கா ஹஸ்ரத் ஷாஜாலால் விமான நிலையத்தில் விமான வருகை,புறப்பாடு பற்றிய தகவல் அறிவிக்கும் பெரிய திரையில் திடீரென ஆபாசப் படம் ஐந்து நிமிடங்கள் காட்டப்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று ஆபாசப் படத்தை நிறுத்தினர். இச்சம்பவம் குறித்து மேல்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய அறிவிப்பு திரையில் ஆபாசப் படத்தைக் காட்டிய 'பலான பங்காளியை' கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
thanks to: http://www.inneram.com

No comments:

Post a Comment