ஏ.டி.எம். மெஷின் மூலம் தங்க கட்டிகள் விற்பனை தொடங்கியது

அமெரிக்காவின் புளோரிடா மாநில ஷாப்பிங் மால் ஒன்றில் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் தங்க கட்டிகள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்துக்கு ஏற்ப 24 காரட் தங்கத்தை பிஸ்கட்டாகவோ நாணய வடிவிலேயோ இயந்திரம் வழங்கும். ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் கெய்ஸ்லர் என்பவர் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அனைவருக்கும் பயன்படும் வித்தியாசமான கண்டுபிடிப்பு இது. தங்கம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கூட்டத்தில் இடிபட்டு நேரத்தை செலவிட வேண்டாம். நினைத்த நேரத்தில் தேவைப்பட்ட தங்கத்தை வாங்கி சேமித்துக் கொள்ளலாம். அப்போதைய விலைக்கேற்ப தங்கத்தின் விலையை கணக்கிட்டு சரியான தொகையை இயந்திரம் வசூலித்துக் கொள்ளும் தொடு திரை வசதியுள்ள இந்த ஏடிஎம்மில் பணத்தையோ கடன் அட்டையையோ செலுத்தினால், முத்திரையிடப்பட்ட சுத்தமான 24 காரட் தங்கம் கிடைக்கும் என்றார்.
 

பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள இந்த எந்திரங்கள் அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஏ.டி.எம். எந்திரத்தை அடுத்த ஆண்டு (2011) உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக ஜெர்மனி நிறுவன அதிகாரி தாமஸ் கெய்ஸ்லர் தெரிவித்துள்ளார்.

thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment