இந்துக்களைப் புண்படுத்தும் ஆபாசப் பாடலை நீக்க கமல் முடிவு


மன்மதன் அம்பு என்ற படத்தில் 'கண்ணோடு கண்ணை கலந்தாளேன்றால்' என்ற பாடலின் வரிகள் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளதாகவும், படத்திலிருந்து இந்த பாடல் வரிகளை நீக்கவில்லையென்றால் படம் திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இந்து அமைப்பின் மிரட்டலைத் தொடர்ந்து கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசும்போது, "மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று பேசினார்.

சமீப வருடங்களாக நடிகர் கமல் தனது படங்களை சர்ச்சைக்குறியதாக்கி (விருமாண்டி முதல் உன்னைப்போல் ஒருவன் வரை) பிரபலப்படுத்துவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  மன்மதன் அம்பு படத்திற்கு போதுமான விளம்பரம் கிடைத்திருப்பதாலும், இந்து அமைப்பினரால் படம் வெளியாகும் தியேட்டருக்கு பாதிப்பு ஏற்பட்டக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாலும் சர்ச்சைக்குறிய அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்க கமல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment