அரசுத்துறையை வெறுக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள்!

்அரசுப் பணியே வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டதோ என்ற எண்ணக் கூடிய அளவு ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் அரசுப் பணிகளில் இருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மத்திய பொதுத் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று நேரடியாக ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த பல ஐபிஎஸ் அதிகாரிகள், தங்களுக்கு அரசுத்துறையை விட தனியார் துறையில் நல்ல வருமானம் கிடைப்பதால் அரசுப் பணிகளை ராஜினாமா செய்துள்ளார்கள். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இவ்வாறு ராஜினாமா செய்தவர்கள் சுமார் 50 பேர் என்கிறது அண்மைய புள்ளிவிவரம்.

இது தவிர மாநிலப் பணிகளில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிகளுக்கு அழைக்கப்பட்டால் அவர்கள் செல்வதில்லை என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. மாநிலங்களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அனுப்பக் கோரி 15 நாள்களுக்கு ஒரு முறை மத்திய உள்துறை அமைச்சகம் நினைவூட்டிக் கொண்டே உள்ளதாம்.

thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment