திருநெல்வேலியில் பீரோவில் வைத்திருந்த
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதுடன் வீட்டிலுள்ள
பொருட்களும் சேதமடைந்துள்ளன. செங்கோட்டை அருகில் உள்ளது தெற்கு மேடு
அங்கன்காலடி. இங்கு வசித்து வரும் கருப்பசாமிக்கு விவசாய நிலங்கள் உள்ளது.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்க வரும் காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக இவர்
நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார்.
தயாரித்த வெடிகுண்டுகளை வீட்டிலுள்ள பீரோவில் வைத்துள்ளார். கடந்த 18
ஆம் திகதிஇவர் மனைவி பீரோவை மூடும்போது நாட்டு வெடிகுண்டுகள்
வெடித்துள்ளது. இதில் வள்ளிக்கு காயம் ஏற்பட்டதோடு வீட்டிலுள்ள பொருட்களும்
சேதமடைந்துள்ளன.
இது
சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரி வெள்ளைப் பாண்டி காவல்துறையில் புகார்
அளித்துள்ளார். காவல்துறையினர் கருப்பசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
thanks to:http://www.inneram.com/
No comments:
Post a Comment