அனைத்து ரயில் வண்டிகளின் எண்களும் மாற்றம்

டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில்கள் இயக்கத்தில் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து ரயில்களுக்கும் ஐந்திலக்க எண்களை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.  இன்றுமுதல் அனைத்து ரயில்களிலும் ஐந்து இலக்க எண்கள் நடைமுறைக்கு வருகின்றன.

நான்கு இலக்க எண்களை ஐந்திலக்க எண்களாக மாற்றியதையொட்டி எக்ஸ்பிரஸ்,மெயில்,சூப்பர் பாஸ்ட் மற்றும் சாதாரண பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் எண்கள் இன்று முதல் ஐந்து இலக்கங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 2633 என்ற நான்கு இலக்க எண்ணில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வண்டி எண் முன்பாக "1" சேர்க்கப்பட்டு 12633 என்று ஐந்து இலக்க எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. இதே போல நான்கு இலக்க ரயில் எண்கள் அனைத்துக்கும் முதலில் 1 என்ற எண் சேர்க்கப்பட்டு ஐந்திலக்க எண்களாக மாற்றப்பட்டுள்ளன.

நீண்டதூர புறநகர் மின்சார ரயில்களில் முதல் எண் "6' என்ற எண்ணில் துவங்குகிறது. சென்னை-திருப்பதி நீண்ட தூர மின்சார ரயில் எண் (பழைய எண்.189) 66021 என ஐந்து இலக்கங்களில் மாற்றப்பட்டுள்ளது.பாசஞ்சர் ரயிலுக்கு முன்னால் 5 என்ற எண்ணைத் தொடர்ந்து பழைய நான்கு இலக்க எண்கள் வரும்படி இடம் பெறுகின்றன.

சென்னை எழும்பூர் -  புதுச்சேரி பாசஞ்சர் ரயில் (பழைய எண் 103) இனி 56037 என்ற ஐந்து இலக்கமாக மாற்றக்கப்படும். புதுச்சேரி-எழும்பூர் (பழைய எண்.104) பாசஞ்சர் ரயில் இன்றுமுதல் 56038 என்று மாற்றப்படும். இதே போல அனைத்து பாசஞ்சர் ரயில்களின் எண்களும் ஐந்து இலக்கங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரயில் எண்களுக்கு முன், "0' என்ற எண் சேர்க்கப்பட்டு ஐந்து இலக்கங்களில் எண்கள் இடம்பெறுகின்றன.


tthanks to : http://www.inneram.com/

No comments:

Post a Comment