இலங்கைக்கு மின் சப்ளை மண்டபம் பகுதியில் ஆய்வு


 இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மின்வினியோகம் செய்யப்பட உள்ளதால்,அதற்கான மண் ஆய்வுப்பணி மண்டபம் பகுதியில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சார வினியோகம் வழங்கபட் உள்ள நிலையில், அதற்கான மதிப்பீடு மற்றும் மண் ஆய்வுப்பணி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மூலம் தொடங்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ஆற்றாங்கரை கடல்பகுதி முதல் இலங்கை தலைமன்னார் வரை மண் ஆய்வுப்பணி நடக்க உள்ளது. இதற்காக தூத்துக்குடியிலிருந்து "பார்ஜ்' என்ற மிதவை படகு மண்டபம் தென்கடல் ஜெட்டிப்பகுதிக்கு நேற்று வந்தது. பார்ஜ் மூலம் , ஆற்றாங்கரை கடல்பகுதியிலிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மன்னார், தலைமன்னார் வரை செட்டிங் பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு , ஆய்வுப்பணி நடக்க உள்ளது.ஆய்வு முடிந்த உடன் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆய்வுப்பணி குறித்து "பார்ஜ் ' ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே இப்பகுதியில் அதிகாரிகள் சர்வே செய்துவிட்டனர். அவர்கள் சொல்லும் பகுதியில் மண் ஆய்வு செய்ய உள்ளோம். முதலாவதாக ஆற்றாங்கரையில் நாளை (இன்று)மண் ஆய்வுப்பணி தொடங்க உள்ளோம்,என்றனர்

No comments:

Post a Comment