
இந்நிலையில், நேற்று முன்தினம் அஜ்மல் கசாப் தாக்க செய்த மனுவில், "நான் ஒரு சிறுவன். எனவே என்னுடைய வயதைக் கண்டறிய சோதனை நடத்த வேண்டும். மேலும் என்னுடைய மனநிலையையும் ஆராய மருத்துவ குழு ஒன்றை நியமிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருந்தான்.
இம்மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அஜ்மல் கசாப்பின் உண்மையான வயதை கண்டறிய தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் வயதுகண்டறியும் சோதனை நடத்தப்பட்ட பின்னர் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் அவன் சிறுவன் இல்லை. 20 வயதை தாண்டியவன் என்று கோர்ட்டு அறிவித்தது என்றார்.
இதையடுத்து கசாபின் வயது சம்பந்தமான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நன்றி : http://www.inneram.com/2010121512507/hc-dismissed-kasabs-plea
No comments:
Post a Comment