பாபர் மசூதி இடிப்பு தினம் - தமுமுக ஆர்ப்பாட்டம் தொடரும்!

பாபர் மசூதி இடிப்பு தினத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி சங் பரிவாரங்களால் இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இருந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்டித் தரவேண்டும் என்றும் மசூதி இடிப்பில் தொடர்புடைய பாஜக தலைவர்களான எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்களைக் கைது செய்யக் கோரி ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இன்று கோயம்புத்தூரில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமுமுக பொதுச் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உயர் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் நியாயமான தீர்ப்பு விரைவில் வழங்கவேண்டும். இந்தப் பிரச்சனை தீரும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்று கூறினார்.

இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை வெற்றி தினமாக அறிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தமுமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

No comments:

Post a Comment