லண்டன்: கோகைன் எனும் போதை மருந்து கடத்தியதாக இந்திய வம்சாவழி கனடா
விமானப்பெண் மீதான வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து லண்ட் கோர்ட்
தீர்ப்பளித்துள்ளது. மன்தீப்ஷகாய் (27) எனும் இந்திய வம்சாவழியைச்
சேர்ந்த கனடா விமானப்பணிப்பெண். ஏர் கனடா விமானம் மூலம் கடந்த மார்ச்
மாதம் பிரிட்டனின் ஹீத்ரு விமானநிலையத்திலிருந்து 4 கிலோ கோகைன் எனும்
போதை மருந்தினை தனது உடமைகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றதாக மார்ச்
மாதம் 26-ம் தேதி லண்டன் மெட்ரோ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 4 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான கோகைன் போதை மருந்து
பறிமுதல் செய்யப்பட்டது. இவருடன் சக பயணியாக மேலும் 4 பேர் கைது
செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கு சவுத்வார்க் மாகாண கோர்ட்டில்
நடந்துவந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. இதி்ல் முக்கிய
குற்றவாளியான மன்தீப்ஷகாய்க்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
thanks to:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151061
No comments:
Post a Comment