பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 51 தீவிரவாதிகள் பலி


பெஷாவர், டிச. 18-

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள கைபர், பக்தூன்காவா மாகாணத்தில் தீரா பள்ளத்தாக்கில் தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற அமைப்பின் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் 3 ஆளில்லா விமானங்கள் நேற்று அப்பகுதியில் ஏவு கணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் அப்பகுதியில் பதுங்கியிருந்த 51 தீவிரவாதிகள் பலியாகினர். ஏவுகணை தாக்குதலில் அவர்கள் பதுங்கியிருந்த வீடுகள் தரைமட்டமாயின. இத்தாக்குதலில் லஸ்கர்-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் மஸ்கல் பக் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் அவர் கொல்லப்பட்டாரா? என உறுதியாக தெரியவில்லை. இவர் கைபர் பகுதியில் ஆட்களை கடத்தி பிணைத் தொகை பெற்று வந்தார். மேலும் பல குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இதை தவிர சுவாத், வர்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இவருக்கு தொடர்பு உண்டு.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் இங்கு அமெரிக்கா வின் ஆள் இல்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுவரை நடந்த 200 தாக்குதல்களில் 1,800 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் தலிபான் முன்னாள் தலைவர் பைதுல்லா மசூத் முக்கியமானவர்.

No comments:

Post a Comment