ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு: 38 பேர் பலி

ஈரானின் தென் கிழக்கு நகரமான ஷாபகரில் 100க்கும் மேற்பட்ட ஷியா பிரிவு முஸ்லீம் மக்கள் கூடிஇருந்த கூட்டத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் பலியானார்கள் 60க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த
அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஈரான் நேரப்படி சரியாக காலை 10 மணி முதல் 10க்குள் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இத்தாக்குதலுக்கு சன்னி முஸ்லீம் ஜன்தல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரான் நாட்டின் ஜகிடன் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு அதே நகரில் ஜூலையில் நடந்த குண்டு வெடிப்பில் 27பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment