நாளை (டிசம்பர்-21) நிலா சிவப்பாகத் தெரியும்!


நாளை செவ்வாய்க் கிழமை சூரியன், பூமி மற்றும் நிலா ஒரே கோட்டில் வருவதால் சந்திர கிரகணம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வானம் மேகமூட்டமின்றி இருந்தால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் நிலவை ரத்தச் சிவப்பு நிறத்திலோ அல்லது ரோஸ் நிறத்திலோ காண முடியும்.

இந்தக் கிரகணத்தின்போது நிலவு மறையாது. ஆனால் அதன் பிம்பம் நம் பூமியை நோக்கி வருவதால் பூமியில் உள்ளவர்களுக்கு நிலவு ரத்தச் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மற்றும் காப்பி கலரில் தெரியும் என்று நாசா விண்வெளி மைய கிரகணங்களை ஆராயும் நிபுணர் பிரெட் எஸ்பெனக் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தில் சிவப்பு நிலவு நன்றாகத் தெரியும். மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவிலிருப்பவர்களுக்கு இன்று (திங்கள்) மாலை முதலே நன்றாகத் தெரியத் துவங்கும். மேற்கு ஐரோப்பாவில் நிலவு மறையும் முன்பு கிரகணத்தின் ஆரம்பம் தெரியும். மேற்கு ஆசியாவில் நிலவு வரும்போது கிரகணத்தின் இறுதி நிலை தெரியும் என்றார்.

இந்த சந்திர கிரகணம் சுமார் 3 மணி நேரம் நீடிக்கும்.கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment