பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி

பாலாச்சூர்: இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டஏவுகணையான பிரித்வி-2 சோதனை ஒரிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றி கரமாக நடத்தப்பட்டது. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த சோதனை இன்று காலை 8.15 மணியளிவில் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது என பாதுகாப்புத்துறை அதிகாரி எஸ்.பி தாஸ் தெரிவித்தார்.பாதுகாப்புத்துறையின் ஆராய்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இதே பிரித்வி ஏவுகனை சோதனை தொழில் நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்தது. தற்போது நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன்மூலம் சுமார்500 முதல் 100 கிலோ வரையில் வெடிபொருட்களை சுமந்து சென்று 350 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தவகை ஏவுகணை இந்திய விமானப்படைபரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.இந்தியாவிற்கு போட்டியாக பாகிஸ்தான் இந்தாண்டு மே மாதத்தில் காவ்ரி வகை ஏவுகணை சோதனை நடத்தியது. இந்நிலையில் நேற்று ஆயிரத்து 300 கி.மீ தூரம் சென்று தாக்க கூடிய காவ்ரிஹாட் எப்-5 வகை சோதனையை நடத்தியது.மேலும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கையை கட்டுப்படுத்தும்வகையில் பிரித்வி-2 சோதனை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

thanks to:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151090

No comments:

Post a Comment