ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?


துபாய் :
 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அருகே உள்ள ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஷார்ஜாவில் உள்ள ஒரு தொழிலாளர்கள் விடுதியில் (Labourers camp) இந்திய மற்றும் பாகிஸ்தானி தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு கைகலப்பு மோதலாய் மாறி மிஸ்ரி நஸீர் கான் எனும் பாகிஸ்தானியர் ஜனவரி 2009ல் கொல்லப்பட்டார்.
அது சம்பந்தமான வழக்கில் 17 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம் கேட்டு கொண்டதற்கிணங்க கொலை இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று விவரித்து காட்டும் சிடியை காவல்துறை ஒப்படைத்தது. ஆனால் காவல்துறை ஆஜராகதாதல் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை என்றும் அதனால் வழக்கு குறுக்கு விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல் பிந்து சுரேஷ் செத்தூர் கூறினார். குறுக்கு விசாரணை முடிந்து அன்றே தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:http://www.inneram.com/

No comments:

Post a Comment