எம்.சி.ஏ. முதுகலை பட்டப்படிப்பில் 14 வயது மாணவர்!

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் தூரவழிக்கல்வி பிரிவில் 14 வயதே நிரம்பிய மாணவர் ஒருவர் எம்.சி.ஏ. முதுகலை பட்டப்படிப்பில் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த முகமது சுஹைல் என்ற மாணவர் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவரது கணிணித்திறனை ஆய்வு செய்த பாரதியார் பல்கலைக்கழகம், சுஹைல் எம்.சி.ஏ.பட்டப்படிப்பில் சேர அனுமதி அளித்துள்ளது.
முகமது சுஹைல் கடந்த எட்டு வருடங்களாக இணையவலையை பயன்படுத்தி வருவதுடன், கணிணிதுறையின் ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு பிரிவில் தனது  திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார். கணிணிகளை அசம்பிள் செய்வதிலும் இங்க்ஜெட் பிரிண்டர்களை சரிசெய்து கொடுப்பதிலும், மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்திலும் கைதேர்ந்த அவரது பாட்டனாரே சுஹைல் கணிணி அறிவில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

thanks to:http://www.inneram.com

No comments:

Post a Comment