சென்னை செல்போன் வாடிக்கையாளர்கள் 1 கோடி!

இந்தியாவில் செல்போன் வழியாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை டர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத் தலைநகர் சென்னை நகரில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தற்போது செல்போன் வழியாக சென்னையில் மட்டும் 4 லட்சம் பேர் செல்போனில் இண்டர்நெட் பார்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2 லட்சம் உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளில் சுமார் 40,000 பேர் (20%) செல்போன் மூலம் இண்டர்நெட்டைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கம்ப்யூட்டர் மையங்கள் மற்றும் வீடுகளில் உள்ள இண்டர்நெட் இணைப்புகள் மூலமும் மாணவ- மாணவிகள் இண்டர்நெட் பார்க்கிறார்கள்.

சென்னையில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள இணையத்தைப் பார்க்கிறார்கள். பாடங்களை பதிவு செய்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், கணினி விளையாட்டுக்களுக்காகவும் இணையம் பெரிதும் பயன்படுகிறது.  கல்வி மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இன்டர்நெட் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது.

13-19 வயதுள்ள பதின்ம மாணவ-மாணவிகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் தளங்களைப் பார்க்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. திருட்டு விசிடி ஓரளவு ஒழிந்தாலும் புதிய படங்களை இணையங்களில் தரவிறக்கி பார்ப்பதும் அதிகரித்துள்ளது.

செல்போன் இண்டர்நெட் பயனாளர்களில் டெல்லி முதலிடத்திலும் (10%), மும்பை இரண்டாமிடத்திலும் (6.4%), சென்னை (4%) மூன்றாவது இடத்திலும் உள்ளது. சென்னையில் 20% பேர் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறார்கள். செல்போன் சேவைகளைப் பொறுத்தவரை BSNL  கடந்த அக்டோபரில் மட்டும் 25 இலட்சம் புதிய இணைப்புகள வழங்கியுள்ளது.


thanks to:http://www.inneram.com/

No comments:

Post a Comment