
கடைப்பிடிக்கப்பட்ட தொலைதொடர்புக் கொள்கையினால், ரூ.1 லட்சத்து 43
ஆயிரம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டதாக, மத்திய அமைச்சர்
கபில்சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது மத்திய
அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது, முன்பு நடைமுறையில் இருந்த ஏலத்தில்
விடும் கொள்கைக்குப் பதிலாக, வருவாயில் பங்கு என்ற அடிப்படையில்
அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை மாற்றப்பட்டதுடன், 10 ஆண்டு கொண்ட உரிமம்
முறையை 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதால் அப்போதைய அரசுக்கு ஏற்பட்ட
வருவாய் இழப்பு ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடி.
2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, பாரபட்சமற்றக் கொள்கையை
கடைப்பிடித்து வருகிறோம். கடந்த 2001 முதல் 2009ம் ஆண்டு வரை 2G
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக யாரும் பணம் செலுத்தவில்லை. ஒவ்வொரு
ஆபரேட்டரும் நுழைவுக்கட்டணமாக ரூ.1658 கோடி ஒருமுறை மட்டும் செலுத்தினால்
போதும். இந்தளவு குறைந்த கட்டணம் அமலில் இருந்ததால்தான், சமீப ஆண்டுகளில்
தொலை தொடர்புதுறையில் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
கடந்த 2001 ம் ஆண்டில் நாட்டில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை விகிதம் 3
%. 2007 ம் ஆண்டில் இது 18.22% ஆகவும், 2009ல் இது 61% ஆகவும்
அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தொலைதொடர்பு கொள்கையைஅமல்படுத்தியதில்
நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சில நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு
நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது முறைகேடுகள் குறித்து தொலை தொடர்பு துறை
அமைச்சகம் ஏற்கனவே நடவடிக்கையை தொடங்கி விட்டது. கிரிமினல் குற்றச்சாட்டு
குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது என்றார்.
thanks to: http://www.inneram.com/
No comments:
Post a Comment